0
பாஸ்வேர்டு தான் எத்தனை சிக்கலானதாக இருக்கிறது.இணையத்தில் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது.சரி பொதுவான ஒரு பாஸ்வேர்டை வைத்து 
கொள்ளலாம் என்றால், எல்லாவற் றுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவது ஆபத்தானது என்கின்றனர்.அதே தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பாஸ்வேர்டும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் நல்ல பாஸ்வேர்டுக்கான இலக்கணத்திற்கு உட்பட்டிருக்க வேன்டும்.

இவற்றை அலட்சியம் செய்யலாம் என்று பார்த்தால் அவப்போது படிக்கும் பாஸ்வேர்டு திருட்டு பற்றிய செய்திகள் கலக்கத்தை தருகின்றன.

இப்படி பாஸ்வேர்டுகள் பாடாய் படுத்தும் போது,யார் தான் இந்த பாஸ்வேர்டை கண்டுபிடித்ததோ என்று கேட்கத்தோன்றும் அல்லவா?

அனுமதி வழங்குவதற்கான சரி பார்க்கும் முறையான பாஸ்வேர்டுகள் ஆரம்ப காலம் முதலே இருக்கவே செய்கின்றன.அலிபாபா கதையில் வரும் திறந்திடு சிசே கூட ஒரு பாஸ்வேர்டு தான்.இருந்தும் நாம் அறிந்த வகையிலான பாஸ்வேர்டு,அதாவது கம்பயூட்டருக்கு திறவுகோளாக இருக்கும் மந்திர சொற்கள் 1960 களில் பயன்பாட்டுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

இருந்தும் முதல் பாஸ்வேர்டு எது என்றோ இல்லை எவரால் உருவாக்கப்பட்டது என்றோ தெளிவாக தெரியவில்லை.ஆனால் அமெரிக்காவின் தொழில்நுட்ப மையமாக திகழும் எம்.ஐ.டி பல்கலைக்கழக்த்தில் தான் முதல் பாஸ்வேர்டு பிறந்த்தாக கருதப்படுகிறது.

1960 களின் மத்தியில் இந்த பல்கலையில் ஆய்வாளர்கள் சிடிஎஸெஸ் எனும் டைம் ஷேரிங் கம்ப்யூட்டரை உருவாக்கினர்.ஆதிகால கம்ப்யூட்டர் போல பிரம்மாண்டமாக இருந்த இந்த கம்ப்யூட்டரை பயன்படுத்துவதற்காக உலகின் முதல் பாஸ்வேர்டு உருவாக்கப்பட்டது.

இந்த கம்ப்யூட்டரை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பெர்னான்டோ கோர்படோ ஆம் நாங்கள் தான் முதல் பாஸ்வேர்டை உருவாக்கியது என மார் தட்டிக்கொள்ளவில்லை.இருக்கலாம் என்று சந்தேகமாகவே கூறும் அவர் மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளும் இந்த முறையை பயன்படுத்தியிருக்கலாம் என்கிறார்.

ஏறக்குறைய இதே காத்தில் ஐபிஎம் நிறுவனம் உருவாக்கிய டிக்கெட் விநியோக் நிர்வாகத்திற்கான சாப்ரே அமைப்பு கம்ப்யூட்டரிலும் பாஸ்வேர்டு பயன்படுத்தப்பட்டது.ஆனால் ஐபிஎம் நிறுவனமே நிச்சய்மாக சொல்வதற்கில்லை என்று கூறிவிட்டது.

எனவே எம் ஐ டியில் தான் முதல் பாஸ்வேர்டு உதயமானதாக கருதலாம்.அந்த முதல் பாஸ்வேர்டு எந்த அளவுக்கு சிக்கலானதாக இருந்தது என்று தெரியவில்லை.ஆனால் அந்த பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருக்கவில்லை.அந்த பாஸ்வேர்டும் திருட்டுக்கு ஆளாது. இத எம் ஐ டி ஆய்வாளரான ஆலன் ஸ்கெர் 25 ஆண்டுகளுக்கு பின்னஅர் ஒப்புக்கொண்டார்.அப்போது கம்ப்யூட்டரை பயன்படுத்த ஓவ்வொரு ஆய்வாளருக்கும் குறிப்பிட்ட அளவே நேரம் ஒதுக்கப்பட்டது.இந்த நேரம் போதவில்லை என்று கருதிய ஸ்கெர் ஒரு ஆனைத்தொடரை உருவாக்கி கம்ப்யூட்டரில் இருந்த பாஸ்வேர்டை எல்லாம் அச்சிட்டு கொண்டார்.

பாஸ்வேர்டு திருடிய குற்ற உண்ர்வை மறக்க அவர் தனது சகாக்களிடமும் அவற்றை கொடுத்திருக்கிறார்.அவரக்ளில் ஒருவரான லிக்லைடர் என்பவர், பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்ளே நுழைந்து அப்போதை பல்கலை இயக்குனர் பற்றி விவகாரமாக குறிப்பெழுதி கடுப்பேற்றினாராம்.

இப்படி இருக்கிறது பாஸ்வேர்டின் கதை.


Source

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top