0
கம்ப்யூட்டரில் நுழைய அதாவது லாக் இன் செய்ய பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இது முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது பிக்வேடு சேவை(http://www.vaptim.com/picword/index.htmல் ) . 


டெஸ்க்டாப்பில் டவுன்லோடு செய்து கொள்ளக்கூடிய இந்த சேவை மூலமாக புகைப்படத்தை கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டாக்கி கொள்ளலாம். விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்து அந்த படத்தின் மீது குறிப்பிட்ட இலக்குகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு படத்தின் மீது இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும் அல்லது புகப்படத்தின் மையத்தில் கிளிக் செய்ய வேண்டும் என தீர்மானித்து கொள்ளலாம். 

அடுத்த முறை கம்ப்யூட்டருக்குள் லாக் இன் செய்யும் போது நாம் தேர்வு செய்த படம் ஸ்கிரின் சேவை போல வரவேற்கும். அதில் நாம் தேர்வு செயத வகையில் கிளிக் செய்தால் உள்ளே நுழைந்து விடலாம். வழக்கமான பாஸ்வேர்டை டைப் செய்யும் முறையை விட இது சுவாரஸ்யமானது. கம்ப்யூட்டருக்குள் லாக் இன் செய்வதற்கான நவீன வழி என்று இதை உருவாக்கிய வேப்டிம் தளம் வர்ணிக்கிறது.

எந்த புகைப்படம் தேவை, அதில் எந்த வகையான இலக்குகளை கிளிக் செய்ய அமைக்க வேண்டும் என்பதை இஷ்டம் போல தீர்மானித்து கொள்ளலாம்.இந்த சேவையை புகைப்பட பாஸ்வேர்டாக பயன்படுத்தலாம்.ஒருவேளை புகைப்பட பாஸ்வேர்டு ம‌றந்து போய்விட்டால் பிரச்ச‌னையில்லை , இந்த சேவையை அன் லாக் செய்வதற்கான ரகசிய எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதுமையான லாக் இன் முறை தேவை என்றால் டவுன்லோடு செய்து பயன்ப‌டுத்தி பார்க்கலாம்.

Download செய்ய: http://www.vaptim.com/picword/index.html

பிக்வேர்டு எனும் பெயரிலேயே மற்றொரு டவுன்லோடு சேவையும் இருக்கிறது.இந்த சேவை பிலேஷ்கார்டு முறையில் பிற மொழிகளை கற்றுக்கொள்ள உதவுகிறது.
http://download.cnet.com/Picword/3000-2279_4-10223742.html

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top