0

1.கீழே நாம் அதிகமாக பயன்படுத்தும் பைல் போமட்கள் சிலவற்றினை பார்ப்போம்.

txt: இது மிக எளிமையான Word Processing Text Fileலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் எந்தவிதமான Formatting விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான Word Processing Software தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.


.rich: ரிச் Desktop Format என அழைக்கப்படும் இந்த வகை Fileகளில் ஓரளவிற்கு Text Formatting இருக்கும். Formatடைக் காட்டுகிற எந்தவித Word Processing தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.

.doc/docx: Microsoft Word தொகுப்பில் உருவாக்கப்படும் Fileகள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் Word தொகுப்பைத் திறந்து File லைத் திறக்கலாம்.

.xls: MS Office தொகுப்பில் உள்ள Excel program உருவாகும் Fileகள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே Excel program அல்லது வேறு ஏதேனும் Spread Sheet program ஒன்றில் தான் இதனைத் திறக்க முடியும்.

ppt: Windowsன் Premium Presentation Package ஆன Power Point தொகுப்பில் உருவாகும் File களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.

pdf: இந்த வகை File Adobe Acrobat Reader அல்லது அதைப் போலவந்துள்ள பல புதிய Program களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். Desktop publishing மூலம் உருவாக்கப்பட்ட File களை விநியோகம் செய்திட இந்த File முறையைப் பலர் கையாளுகின்றனர். File உருவான band இல்லாமல் Text Fileலை அப்படியே படம் போல் Fileலாக இது காட்டும். தற்போது இந்தவகை Fileகளை மீண்டும் Textடாக மாற்றுவதற்கும் Program கிடைக்கின்றன. Adobe Acrobat Reader  உட் பட இந்த வகை file களைத் திறந்து படிக்கக் கூடிய Program அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

htm / html: ஒரு File இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது Internet பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு Web Browser Program திறக்கலாம். Windows இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால் அது Internet Explorer தொகுப்பினைத்திறந்து இந்த Fileலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் Computerல் உள்ள வேறு Web Browser மூலம் இதனைத் திறக்கலாம்.

csv: ஒரு Spread Sheetல் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள்என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த File க்குக் கிடைக்கும். இதனை Excel program திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால்போதும் என எண்ணினால் எந்த Word தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.


2.சுருக்கப்பட்ட பைல்கள்:

கீழே Fileகளை சுருக்கித் தருகையில் கிடைக்கும் File வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு File களைச்சுருக்கித் தருவதனை File compression என அழைக்கின்றனர். Fileகளின்அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

zip: இந்த துணைப் பெயருடன் ஒரு File உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட File என்று பொருள். இத்தகைய File ளை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய Programகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில்அதிகம் பயன்படுத்தப்படுவது Winzip Program.

rar: இதுவும் சுருக்கப்பட்ட Fileன் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில Special Program தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.

cab: உங்கள் Computer ல் Windows இயக்கத்தில் ஏதேனும் Program ஒன்றை, எடுத்துக் காட்டாக word Program, Install செய்தால் Windows அந்த Program னைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை Cabinet File ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை Fileன் துணைப் பெயர்தான் இது. இந்த Fileலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.


3.Image File கள்:

விண்டோஸ் இயக்கத்தில் பலவகையான பட பைல்களைஉருவாக்கலாம்; கையாளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். போட்டோக்கள், ஸ்கேன் செய்யப்பட்ட பைல்கள் ஆகியவை இந்த வகைகளே. கீழே நீங்கள் அடிக்கடி சந்திக்கும் சில வகை இமேஜ் பைல்களின் துணைப்பெயர்கள் தரப்படுகின்றன.

psd: Adobe Photoshop பயன்படுத்தி Image Edit மற்றும் உருவாக்கப்படும் File களுக்கு இந்த துணைப் பெயர் வழங்கப்படும். உங்களிடம் Adobe Photoshop இல்லை என்றால் File வகை மாற்றத்திற்கு வழிசெய்திடும் புரோகிராம் ஒன்றின் (Hercule Software’s Graphic Converter) மூலம் இதன் Format மாற்றி வேறு துணைப் பெயருடன் அதே Fileலை உருவாக்கிப் பின்அதற்கான Programல் திறக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட மாற்றித்தரும் Program http://www.herculesoft.com/123-jpeg-converter.html என்னும் முகவரியில் கிடைக்கிறது.

psp: இந்த துணைப் பெயர் கொண்ட File Photoshop போன்ற இன்னொரு Image Edit Program மான Paint Shop Pro என்னும் Programல் உருவான Fileகளுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். இந்த Program சற்று விலைஅதிகமானது. இந்த File களையும் Converter கொண்டு மாற்றலாம்.

bmp: மிக எளிமையான graphics File. இதனை Bitmap File என்றும் அழைப்பார்கள். Windows Paint உட்பட எந்த image Program மூலமும் இதனைத் திறக்கலாம்.

jpg: இது ஒரு பொதுவான Image File வடிவமாகும். இதன் பயன்பாடு Internetல் அதிகம். ஏனென்றால் இந்த துணைப் பெயர் கொண்ட Image Fileன் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். இந்த File உருவாக்க அதிநவீன File Compression தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பலவித Image Program மூலம் இதனைத் திறந்து பார்க்கலாம். Windows Explorer தொகுப்பு இந்த வகை File களைப் பார்க்க மிக எளிமையான Programமாகும்.

gif: இதுவும் மிகவும் பிரபலமான ஒரு Image வகை File ஆகும். இதனையும் Windows Explorer கொண்டு திறந்து பார்ப்பது எளிது.

tif: Home Computer களில் Digital Image களைப் பதிந்து வைத்துப்பயன்படுத்த இந்த துணைப் பெயர் கொண்ட File வகைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனைப் பல Image Editing Program களில் திறந்து பயன்படுத்தலாம் என்றாலும் Windows Explorer எளிமையானதாகும்.

scr: இது Windows Screen Server Fileன் துணைப் பெயர். ஒரு Screen Server Program னை Install செய்திட Control Panel சென்று Display Properties Window பெற்று அதில் Screen Server tabனைத் தட்டவும். இங்கு Internet இருந்து Download செய்த Screen Server file Program சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.


4. Audio File கள்:

இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான Audio Fileகள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக் காட்டாக Mp3 file கள் இந்தவகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய File ளாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான File Format இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச Program கள் இணையத்தில் கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள்கொண்டதாகவும் கருதப்படுவது Win amp player ராகும். Windows Media Player இதனை இயக்கும்.

wav: Mp3 போல இதுவும் பிரபலமான ஒரு இசை File. Digital Audio வைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய File லாக உருவாகும். mp3 இயக்கும் Audoi PLayer கள், குறிப்பாக Windows Media player, இதனையும் இயக்குகின்றன.

aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் Audio CDகளில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் Audioவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் File அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 MB வரை இடம் பிடிக்கும். Windows Media Playerரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.

ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய File வகையாகும். இதனை Ogg Vorbis audio என்றுகூறுவார்கள். இது mp3 Fileலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும் துல்லிதமாகவும் தரும். இதனையும் Windows media Playerல் இயக்கிக்கேட்கலாம். ஆனால் அதற்கு codec என்னும் Special File வேண்டும். இதனை http://www.free-codecs.com/ என்ற தளத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.

wma: Windows Media Player File என்பதன் சுருக்கம். இந்த பைல்வகையை உருவாக்கியது Microsoft நிறுவனம். இந்த வகை File களும்அளவில் மிகச் சிறியதாக இருக்கும். Windows Media Playerல் இதனை இயக்கி ரசிக்கலாம்.


5.Operating System Files கள்:

சில File களை அதன் மீது Double Click செய்தால் அவை எந்தவிதமான Program துணை இன்றி தாமாகவே இயங்கும். இவை பெரும்பாலும் Operating System filesகலாகும். பெரும்பாலான இந்த Fileகள் கீழ்க்காணும் துணைப் பெயர்களுடன் இருக்கும்.

exe: Executable File என்பதன் சுருக்கம். இதில் ஒரு Program இருக்கும். இதனை இரு முறை Click செய்தால் அந்த Program விரித்து இயங்கும்.

bat: batch file என்பதன் சுருக்கம். இந்த Fileலில் வரிசையாக பல கட்டளைகள் தரப்பட்டிருக்கும். இதன் மீது Double Click செய்திடுகையில் அந்த கட்டளைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த Fileலை Notepadல் உருவாக்கலாம் மற்றும் Edit செய்திடலாம்.

vbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். Microsoft நிறுவனம் உருவாக்கிய Visual Basic என்னும்Programming மொழி மூலம் Programmer கள் Windowsல் இயங்கும் பல Application களை வடிவமைக்கின்றனர். அந்த Fileகளின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் Double Click செய்தால் அந்த File இயங்கும். ஆனால் Virus File களை எழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் Virus Program களை உருவாக்குகின்றனர். எனவே இந்த துணைப் பெயருடன் உங்கள் Email லில் ஏதேனும் Attach File வந்தால் கவனமாக அதனை ஏதேனும் Anti Virus Program கொண்டு சோதித்துப் பின் திறக்கவும்.
Source : Unknown 

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

Post a Comment Blogger

 
Top