பேஸ்புக் லைக் சின்னம் மாற்றியமைப்பு
முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான Facebook முதல் முறையாக தனது Like வசதி சின்னத்தில் கை வைத்துள்ளது. புதிய வடிவமைப்புடன் இந்த சின்னம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இணைய உலகில் Facebookன் Like மற்றும் Share வசதி மிகவும் பிரபலமானது. 2010 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வசதியாக இருக்கிறது. Facebook தெரிவித்துள்ள தகவலின்படி Like சின்னம் தினமும் 75 லட்சம் இணையதளங்கள் மூலம் 2,200 கோடி முறை பார்க்கப்படுகிறது. Facebookகிலும் சரி, இணையத்தில் நம்மை கவரும் தகவல்களை பிடிச்சிருக்கு என்று மற்றவர்களுக்கு தெரிவிக்க இந்த வசதி பயன்படுகிறது. Like வசதி மூலம் விரும்பும் தகவலை பொதுவாக Facebook நண்பர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்தலுக்கான Share வசதி, பகிர்தலுக்கான கருத்துடன் குறிப்பிட்ட இடத்தில் விரும்பிய தகவலை பகிர்ந்து கொள்ளலாம்.அறிமுகமான நாள் முதல் இந்த சின்னங்களின் மீது கை வைத்திராத Facebook தற்போது இவற்றை முதல் முறையாக மறுவடிவமைப்பு செய்துள்ளது. புதிய வடிவமைப்பில் Like சின்னத்தில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கட்டை விரல் காணாமல் போய் அதற்கு பதிலாக பேஸ்புக்கின் அடையாளமான F ஆங்கில எழுத்து இடம் பெற்றுள்ளது. Share சின்னமும் இவ்வாறே F எழுத்துடன் அமைந்துள்ளது. துடிப்பான நீல நிற பின்னணியில் இந்த சின்னம் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டு வசதிகளையுமே அருகருகே பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த மாற்றத்தை Facebook பரிசோதித்து வந்த நிலையில் இப்போஉது அதிகாரபூர்வமாக இந்த மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயனாளிகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சின்னம் தானாக புதுப்பிக்கப்பட்டு விடும் என்கிறது Facebook.
சின்ன மாற்றம் தான், ஆனால் மிகவும் முக்கியமானது. காரணம் இரண்டு சின்னங்களுமே இணையவாசிகளின் மனதில் விருப்பத்திற்கான அடையாளமாக பதிந்துவிட்டது. புதிய வடிவமைப்பு சுலபமானதாக இருக்கவில்லை. பல்வேறு உலாவிகள் மற்றும் எண்ணற்ற இணைய வடிவங்களில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தெளிவாக,பளிச்சென தோன்றும் வகையில் மிக கவனமாக இவை உருவாக்கப்பட்டுள்ளதாக Facebook தெரிவித்துள்ளது.
இணையத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்தலை மேம்படுத்த புதிய வடிவமைப்பு உதவும் என்று Facebook எதிர்பார்க்கிறது. ஆனால், Like சின்னத்தில் கட்டைவிரல் இல்லாமல் இருப்பது பேஸ்புக் அபிமானிகள் பலரை வருத்தத்தில் ஆழ்த்தலாம்.
மாற்றம் பற்றி பேஸ்புக்கின் அதிகாரபூர்வ விளக்கம் இங்கே
Post a Comment Blogger Facebook