0

ஆப்பிலின் புதிய அறிமுகமான ஐபோன் 5எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? தொழிநுட்ப இணையதளமான மேக் யூஸ் ஆப் இது தொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுரைய வெளியிட்டுள்ளது.ஐபோன்5 தொடர்பான செய்திகளும் அதன் சிறப்பம்சம் மற்றும் குறைகளை அலசும் கட்டுரைகளும் இணயம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன.என்ன தான் ஆர்வத்தோடு படித்தாலும் ஐபோன் பற்றி முழு சித்திரம் கிடைக்காமல் குழப்பமாக தான் இருக்கும்! ஐபோன்5 சூப்பரா? ஏமாற்றமா? என்று தெளிவாக சொல்லிவிட முடியாது.


 ஆனால் மேக் யூஸ் ஆப்பின் இந்த‌ கட்டுரை ஐபோன் 5 குறை நிறைகள் தொடர்பான அலசலில் இறங்காமல் இந்த போனை புரிந்து கொள்ளக்கூடிய 10 யூடியூப் வீடியோக்களை மட்டும் அழகாக பட்டியலிட்டுள்ளது. ஒவ்வொரு வீடியோ பற்றியும் சுருக்கமான அறிமுகமும் இருக்கிற‌து.

முதல் வீடியோ ஐபோன் 5 அறிமுகம் தொடர்பான அறிமுகத்தின் கீநோட் உரையின் முன்னோட்டம். ( அடடா! ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாத ஆப்பில் கீநோட் உரையா?).அடுத்த வீடியியோ இந்த உரையின் முழுப்பகுதி.அடுத்த இரண்டு வீடியோக்கள் இரண்டு போன்களுக்கான முன்னோட்டம். இவையெல்லாம் ஆப்பில் தரப்பிலானவை.

இந்த கதை எல்லாம் வேண்டால் ஐபோன் 5 எப்படி? என்ற கேள்விக்கு சுயேட்சையான கருத்து தேவை என நினைத்தால்,கிறிஸ் பிரில்லோவ்ன் வீடியோ அதற்கு பதிலாகிறது. கிறிஸ் பிரில்லோ இணையத்தின் பிரபல் புள்ளி. தொழில்நுட்பம் தொடர்பான தகவல் மற்றும் பார்வைகளை த‌ரும் தனிநபர் ராஜ்யத்தை நடத்தி வருபவர். யூடியூப்பில் அவரது சானலுக்கு 2 லட்சம் சந்தாதாரரகள் இருக்கின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஐபோன் 5 பற்றி அதன் அறிமுகத்தின் போது அவர் நேரடியாக பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.

ஐபோனை ஆராதிக்க ஆயிரக்கணக்கில் அபிமானிகள் இருப்பது போல ஐபோனை பகடி செய்யவும் நிறைய பேர் இருக்கின்றனர். ஐபோன் 5ஐ கிண்டல் செய்து உருவாக்கப்பட்ட இரண்டும் அழகான வீடியோக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கால ஐபோன் எப்படி இருக்கும் என்னு பழைய வீடியோவையும் எடுத்து இந்த கட்டுரையில் இணைத்துள்ளனர்.சுவாரஸ்யமான தொகுப்பு.

என் பங்கிற்கு ஐபோ5 பற்றி தேடிப்பார்த்த போது ஐபிக்ஸிட் இணைப்பு கண்ணில் பட்டது. புதிய ஐபோனை பிரித்து மேய்ந்திருக்கின்றனர்.நிஜமகவே ஐபோனை பார்ட் பார்ட்டாக கழற்றி அதன் அம்சங்களை அல்சியுள்ளனர். இந்த தளத்தின் சிறப்பம்சமே இப்படி பிரித்து மேய்வது தான்.

Post a Comment Blogger

 
Top