0
Who sent the 1st E-mail ?


1876 ஆண்டு மார்ச் மாதம் 17 திகதி அலெக்ஸ்சந்தர் க்ரஹாம் பெல் அவருடைய உதவியாளருடன் “ Mr.Watson Come Here, I want you” என்ற முதல் செய்தியை தொலைபேசி மூலம் பகிர்ந்து கொண்டனர். ஆகவே இதன் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றத்தை நீங்கள் யாவரும் அறிவீர்கள். 

அதன் பிறகு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சாதனம் E -mail என்றால் பிழையாகாது. இதனை இலத்திரனியல் கடிதம் என்று சொல்லவும் முடியும்.  


ஆனால் இரண்டு கேள்விக்குறிகள் ??
E mail ஐ கண்டு புடிதவர் யார் ?
அது உலகிற்கு வந்து எத்தனை வருடம் ?




ஹா ஹா நல்ல கேள்விதான் 

அதாவது 2011 அக்டோபர் மாதத்திற்கு e mail கு வயது 40 ஆகும் 
அவ்வாறென்றால் 1971 அக்டோபர் தான் முதலாவது e mail ஐ அனுப்பி இருக்கிறார்கள்.


அப்போ e mail ஐ யார் அனுப்பியது என்று நீங்க கேட்களாம் 
ம்ம்ம்ம்ம்ம்
அவசரப்பட வேண்டாம். :) அதைப்பற்றி தான் சொல்லப் போகிறேன்.


1941 அம்ஸ்டர்டாம், நியூ யார்க் இல் பிறந்த றேமொன்ட் சாமுவேல் டோம்லின்சன் ஆவர். 
இவர் அமெரிக்காவின் பழைய பல்கலைக்கழகமான Rensselaer Polytechnic Institute இல் பட்ட படிப்பை முடித்தார். 


றேமொன்ட் சாமுவேல் டோம்லின்சன்
1968 இல் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் கீழ் arpanet வளையத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்ட Bolt breaknek & newman (BBN ) கம்பனியில் வேலை செய்தார். அப்போது அவரினால் உருவாக்கப்பட SENDMSG - READMSG என்று இரண்டு கணணியை பயன்படுத்தி செயற்படக் கூடிய CPYNET என்ற Software   ஒன்றை உருவாக்கினார். 


ஆகவே இந்த SENDMSG - READMSG - CPYNET என்ற மூன்றையும் ஒன்று படுத்தி e mail என்ற programme ஐ உறவகினர்.


1971 அக்டோபர் மாதம் கேம்ப்ரிஜ் இல் உள்ள காரியாலயத்தில் இணைக்கப்பட்டிருந்த Arpanet வளையத்திலுள்ள இரு computers இன் துணையுடன் (BBN TENEX A , BBN TENEX B ) QWERTYUIOP என்று குறிப்பிட்டு முதலாவது email ஐ அனுப்பினர்.
அதாவது BBN B இலிருந்து BBN A இற்கு அனுப்பினர் .

BBN A & BBN B
ஆகவே இந்த email இனால் 1973 ஆம் ஆண்டு ஆய்வின்படி 75 % traffic Arpanet இல் காணப்பட்டது. அடுத்ததாக 1990 இல் www .  ( World Wide Web ) இன் அறிமுகத்தால் இந்த email மேலும் வளர்ச்சி அடைந்தது. 1996 இல் அமெரிக்காவில் சாதாரண கடிதங்களை விட இந்த email அனுப்பிய வீதம் அதிகமாஹா காணப்பட்டது.


எவ்வாறாயினும் தற்பொழுது பரிமாறப்படும் email எண்ணிக்கையில் 81 % spam ஆகவே காணப்படுகின்றது. 

ஆஹ் இன்னுமொரு முக்கியமான விடயம் சொல்ல வேண்டும். அதாவது இந்த குறியீடை பற்றி @ (at ) 



இந்த குறியீடு பொதுவாக email முகவரி உடன் கண்டிருப்பீர்கள். இந்த @ ஐ உருவாக்கிவரும் அந்த டோம்ளிசன் தான்.

email ஐ பற்றி எனக்கு தெரிந்த அனைத்தையும் கூறிவிட்டேன். பொதுவாக இன்டர்நெட் இல் உலாவித்திரியும் நம்ம சிங்கங்களுக்கு ஈமெயில் என்றால் தெரியும் என்று நினைக்கிறன் ஆனால் மேற்கூறப்பட்ட விடயங்கள் சிலர் மாத்திரமே அறிந்த விடயமாகும்.  தற்போது facebook , twitter போன்ற social media களினால் email அனுப்பும் எண்ணிக்கை குறைந்துள்ளதாம். எதிர்காலம் எவ்வாறு இருக்குமோ ?????????? 

ஆகவே இது எனது புதிய blog இன் முதல் article ஆகும். நீங்கள் இதன் மூலம் எதாவது பெற்றுக்கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே comment பண்ணவும் மறக்க வேண்டாம். உங்களது கருத்துக்களை கட்டாயம் தெரிவியுங்கள். 

இறுதியாக ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன்... அதாவது சாமுவேல் டீ மோர்ஸ், அலெக்ஸ்செண்டர் கிரகம் பெல், கூக்ளி எல்மோ மார்கோனி போன்றவர்களுக்கு கிடைத்த பெறுபேறு, email ஐ கண்டு பிடித்த டோம்லின்சன் கு கிடைக்குமா? 


மீண்டும் சந்திப்போம்...

தமிழ் மூலம் type பண்ண இங்கே click பண்ணவும் 


Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment Blogger

 
Top