அப்பிள் நிறுவனம் அடுத்த வாரமளவில் மொபைல் சாதனங்களுக்கான iOS 8 இயங்குதளத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இவ் இயங்குதள அறிமுகத்துடன் பயனர்களுக்கு அதிரடிச் சலுகை ஒன்றினை வழங்கவும் அப்பிள் நிறுவனம் தயாராகியுள்ளது.
அதாவது ஒன்லைன் சேமிப்பு வசதியை தரும் iCloud இனை சலுகை விலையில் பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்படி 25GB வரையான சேமிப்பு வசதியினை 0.99 டொலர்களுக்கும், 200GB வரையான சேமிப்பு வசதியினை 3.99 டொலர்களுக்கும், 500GB வரையான சேமிப்பு வசதியினை 9.99 டொலர்களுக்கும், 1TB வரையான சேமிப்பு வசதியினை 19.99 டொலர்களுக்கும் மாதாந்த அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும்.
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.