0

Off-shoring :  வேலையை வெளிநாட்டுக்கு அனுப்பி முடித்துக்கொள்வது.

Near-shoring :  தூரத்தில் உள்ள வெளிநாடாக இல்லாமல் பக்கத்திலேயே இருக்கும் நாடுகளுக்கு வேலையை அனுப்புவது.

Two-shoring:    இதுல கொஞ்சம். அதுல கொஞ்சம் இருந்தால் நல்லது என்று நினைக்கிற கம்பெனிகள் சொந்த நாட்டில் ஒரு லொகேஷனையும், வெளிநாட்டில் ஒரு லொகேஷனையும் வைத்துக்கொள்வது.


Multishoring:  " ஒரே கூடையில் ஏன் இத்தனை முட்டை" சிந்தனை உள்ளவர்கள் வேலைகளை பல நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யும் வித்தை.

Right-shoring:  எந்த வேலை எங்கே மலிவாக செய்ய முடியுமோ,  அந்த நாட்டுக்கு அந்த வேலை என்று பிரித்துப் பார்த்து பகிரும் புத்திசாலித்தனம்.

In-shoring:  கம்பெனிகள், சொந்த நாட்டில் அவர்களின் செயல்பாட்டுகளை அதிகரித்து அதன்மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்புகளை பெருக்கும் போக்கு.

In-sourcing :   (அவுட்சோர்சிங்கிற்கு எதிர்ப்பதம்)  வெளிநாட்டுக்கு போன வேலைகளை மீண்டும் நம் நாட்டிற்கே கொண்டு வருவது.

Home-sourcing: அலுவலகத்தில் செய்யும் வேலையை, தொழிலாளியின்  வீட்டுக்கே  கொடுத்து அனுப்புவது.

Unsourcing :  கஸ்டமர் சப்போர்ட்னு கம்பெனியை தேடி வருபவர்களை சோஷியல் நெட்வொர்க்குகளுக்கு அனுப்பி, அங்கே 'வாடிக்கையாளர்கள் நீங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் பதில் சொல்லி தீர்வு கண்டுகொள்ளுங்கள்' என்று கழண்டுகொள்ளும் சாதுர்யம்.


யாருக்கு எந்த source விருப்பமாக இருந்தாலும்,
எனக்கு பிடிச்சது ஒன்னுதான்.

ஓப்பன்Source!

Post a Comment Blogger

 
Top