0

மேலும் மெலிதானது,மேலும் லேசானது,மேலும் செயல்திறன் வாய்ந்தது எனும் வர்ணனையோடு Apple ளின் iPad Air அறிமுகமாகியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவி நடைபெற்ற ஆப்பிளின் வருடந்திர தொழில்நுட்ப திருவிழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த iPadன் அடுத்த மேம்பட்ட மாதிரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


2010 ம் ஆண்டு அறிமுகமான பலகை கணணி என்று சொல்லப்படும் Tablat வகையை சேர்ந்த iPad ஐந்தாம் தலைமுறை வடிவமாக இது அமைந்துள்ளது. இதற்கு புதிய பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது. iPad Air. புதிய பெயர் கொஞ்சம் பொருத்தமானது தான். காரணம் iPad Air அதற்கு முந்தைய மாதிரிகளை விட மெலிதானது மற்றும் லேசானது. இதன் அடை ஒரு பவுன்ட் தான் என்கிறது Apple.  அதவாது 500 கிராமுக்கும் குறைவு. இதை கையில் வைத்து பார்த்தால் தான் இந்த அருமை தெரியும் என்றும் ஆப்பிள் சொல்கிறது.
எடையில் இளைத்திருப்பதோடு அளவிலும் மெலிந்திருக்கிறது.இந்த அகலம் 7.5 மி.மி தான். வழக்கமான அகலத்தை விட 20 சதவீதம் குறைவு . மொத்த அளவு 9.7 இன்ச்.( 24.6 செ.மி).மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல அளவிலும் சிறிதானாலும் iPad Airன் செயல்திறன் கூடியிருக்கிறது என்கிறது Apple. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 5s ல் உள்ள ஆற்றல் மிக்க A7 Chip இதன் இதயமாக இருக்கிறது. டெஸ்க்டாப் பக்கம் போகாமலே வழக்கமான CPU விட இரண்டு மடங்கு செய‌ல்திறன் சாத்தியம் என்கிறது Apple.கிராபிக்ஸ் போன்ற செயல்பாடுகளுக்கு அசத்தலாக் இருக்குமாம்.

அதோடு ரெடினா டிஸ்பிலே திரை தகவல்களை பார்ப்பதிலும் படிப்பதிலும் மேம்பட்ட அனுபவததை தரக்கூடியது. மேலும் பேட்டரி ஆற்றலும் குறைவாகவே பயன்படுத்தப்படுமாம்.

மேம்ப்ட்ட வயர்லெஸ் வசதி மற்றும் சக்தி வாய்ந்த Apps( செயலிகள்) இதன் மற்ற சிறப்பம்சங்களாக சொல்லப்படுகிற‌து. 5 Megapixel ஐசைட் காமிரா இருக்கிறது.

Apple அறிமுகம் என்றாலே அதன் அபிமானிகள் கொண்டாடவும் செய்வார்கள். ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதை விட அதிக நுணுக்கத்தோடு அதன் குறை நிறைகளை அலசி ஆராயவார்கள்.பார்ப்போம் தொழில்நுட்ப விமர்சக்ர்களிடம் iPad Air என்ன மதிப்பெண் வாங்குகிறது என்று.

iPad Airன் இணையதளம்;http://www.apple.com/ipad-air/

Post a Comment Blogger

 
Top