0
ஆன்ட்ராய்ட் "L" முழுமையான பதிப்பு வெளிவர இன்னும் சில பல மாதங்கள் ஆகலாம். ஆனால் அதன் பிரிவியூ வெளிவந்து இருக்கிறது. உலகெங்கும் ஸ்மார்ட் போன்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் அடுத்த முக்கிய பதிப்புதான் ஆன்ட்ராய்ட் "L".


வடிவமைப்பு: 
ஆன்ட்ராய்ட் "L" பொறுத்தவரை அனிமேஷன் மிக அருமையாக உள்ளது. இந்த புதிய பதிப்பில் அனிமேஷன்க்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. வண்ணங்களும் கண்களுக்கு நேர்த்தியாக இருக்கிறது. கீழே நாவிகேசன் டச் கீ பாடில் முன்பிருந்த ஐகான்களுக்கு பதிலாக புதிதாக படுக்கை முக்கோணம் , வட்டம் மற்றும் சதுரம் ஆகிய வடிவில் வடிவங்களை கொடுத்துள்ளது. இது பார்ப்பதற்க்கும்‌ கண்களுக்கு நேர்த்தியாக உள்ளது.


மேம்படுத்தப்பட்ட அறிவுறுத்தல் வசதி (Improved notifications): 
ஆன்ட்ராய்ட் "L" புதியவர்களுக்கும் எளிதாக கையாளும்படி அமைந்துள்ளது. இதன் மேம்படுத்தப்பட்ட அறிவுறுத்தல் வசதி நன்றாகவே இருக்கிறது. 

லாக் செய்தும் பயன்படுத்தும் முறை: 
இதன் லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்ஸை பொருத்தும், புதிய வசதியை சேர்த்து இருக்கிறார்கள். எனவே அழைப்புகள், பாட்டு, காமிரா, மற்றும் நாம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஆப்ஸை அன்லாக் செய்யாமலே பயன்படுத்த முடியும்.



புதிய வடிவில் கால்குலேட்டர்:

ஆன்ட்ராய்ட் Lல் கால்குலேட்டர் புதிய பரிமாணத்தை பெற்றுள்ளது. பழைய கால்குலேட்டர் போல் அல்லாது, இரு பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு பாதி எண்களுக்காகவும், மறு பாதி குறிகள் மற்றும் அலகுகளுக்காவும் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்புகளில் sin, tan cos போன்ற அழகுகளை பெற ஆப்ஸன்ஸ் சென்று தேர்ந்தெடுக்க வேண்டிவரும். இப்போது ஒரே திரை அமைப்பில் அனைத்து வசதிகளையும் பெறலாம்.


சிறந்த பாட்டரி சேமிப்பு திறன்:  

ஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருக்கிறது. அதற்கு தகுந்த காரணங்களும் இருக்காதான் செய்கின்றன. ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள பற்பல ஆப்ஸ்கள் பாட்டரியை அதிகம் எடுத்துக்கொள்கிறது. இதனால் பாட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது. அதனால் தினம் இரண்டு முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த பாட்டரி பிரச்சனையை தீர்க்க இந்த புதிய ஆன்ட்ராய்ட் "L" பதிப்பில் தீர்வு கண்டு இருக்கிறார்கள். இதனால் பாட்டாரி அதிகம் நீடித்து இருக்கும் என சொல்கிறார்கள். (படிக்க: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பாட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா?)


சிறந்த வலை ஒருங்கிணைப்பு (Greater Web integration): 

இதில் கூகிளின் குரோமின் தனி டேப்களும் தனித் தனியாக இடம்பெறுகின்றன. மேற்கண்ட அனைத்தும் தேற்றத்திலும் நிறத்திலும் நிறத்திலும் மாறுதல் பெற்ற அதே நேரத்தில், அனைத்திற்க்கும் நிழல்கள்(Shading) இடம்பெறுமாறு கூகுள் வடிவமைத்துள்ளது. இதனால் நாம் தொடும் பொருள் உன்மையாக நகர்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே இந்த புதிய பதிப்பில் அனிமேஷன்க்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.



கூகிள் உடல்நலம் (Google Fit): 

உங்கள் உடல்நலத்தில் எங்களுக்கு அக்கறை இல்லாமல் இல்லை என்று சொல்லும் விதமாக கூகிள் உடல்நலம் (Google Fit) சேவை உங்கள் உடல் மற்றும் பயிற்சி தொடர்ப்பான அணைத்து விசியங்களிலும் அறிவுரை வழங்க வருகிறது. இது அப்ளிகேசனாக இருக்கும். இந்த சேவைக்கு Nike, Adidas, Runkeeper, HTC, Asus, LG and Motorola போன்ற நிறுவனங்கள் இதுவரை கைகோர்த்து உள்ளது. இந்த சேவையில் உடற்பயிற்ச்சி தொடங்கி சாப்பிட வேண்டிய வகையாறாக்கள் அனைத்தையும் அறிவுறுத்தும்.


வேகமும் நீட்சிகளும். (ART Runtime and Android Extension Pack): 

ஆன்ட்ராய்ட் "L" மேம்படுத்தப்பட்ட மொபைல்கள் வேகம் அதிகாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட் "L" பதிப்பில் 32bit மற்றும் 64bit ஒத்திசைவு அமைப்பும் இருக்கிறது. இந்த புதிய பதிப்பானது வன்பொருள்க்கு ஏற்ப வேகமாக இயங்கும் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் கூகிள் உதவியின்றி ஒரு அணுவும் அசையாது என தெரிகிறது. கணினி அல்லது மொபைல் வைத்து இருப்பவர்கள் ஏதாவது ஒரு கூகிள் தயாரிப்பை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அந்த வகையில் ஆன்ட்ராய்ட் வரிசையில் அடுத்த முக்கியமான பதிப்பான ஆன்ட்ராய்ட் "L" வரும் காலங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது.


நண்பர்களே தொழில்நுட்ப பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு முறை லைக் செய்தால் போதுமானது. உங்கள் மேலான கருத்துக்களையும் எதிர்பாக்கிறோம். கண்டிப்பா உங்கள் கருத்துக்களை கீழே முக நூல் அல்லது ப்ளாகர் மூலம் கமாண்ட்ஸ் செய்யுங்கள். 

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top